சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 203 தொகுதிகளை அ.தி.மு.க., அணி கைப்பற்றியுள்ளது. தி.மு.க., அணி 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 147 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. 15ம் தேதி ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். மேலும் தி.மு.க., அமைச்சர்களான க. அன்பழகன், பொன் முடி, பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெள்ளக்கோவில் சுவாமிநாதன் உட்பட பலர் தோல்வியைத் தழுவினர்.
மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 225 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இடதுசாரி கட்சியினர் 63 இடங்களை கைப்பற்றியுள்ளனர். புதுச்சேரியில், என். ஆர். காங்கிரஸ் அ.தி.மு.க., கூட்டணி 20 தொகுதிகளிலும், காங்., 9 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment