Sunday, March 4, 2012

The Help (2011) --- நம்ம ஊரில் ஓடாது




1960 களில் ஜாக்சன் மிசிசிபியில் பட்டப்படிப்பு முடித்து எழுத்தாளர் கனவோடு வீட்டுக்கு திரும்பும்  யுஜீனியா அடிமைகள் போல வீட்டு வேலை செய்யும்  கறுப்பு இனபெண்களைப்பற்றி அவர்களின்  கண்ணோட்டத்தில்  ரகசியமாக   ஒரு புத்தகம் எழுதுவதே கதை...

ந்த படம் காதரின் ச்டாக்கெட்டின் புகழ் பெற்ற நாவலான The Help ஐ தழுவி எடுக்கப்பட்டது.  இந்த படம்  பார்க்கும்  முன் அந்த புத்தகம் கிடைத்தால் வாசி யுங்கள்.அது வெளிவந்த போது ஒரு  வெள்ளைப்பெண்   எவ்வாறு    கறுப்பர் களுக்கு  சாதகமாயிருந்து   அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்அத்தனை வெள்ளைக் குழந்தைகளும் கறுப்பு ஆயாக்களால்  தான் வளர்க்கப் படுகின்றன என்றகசப்பான பல உண்மைகளையும்  வெளிக்கொணர்ந்து சர்ச்சைக்குள்ளானது.
றுபடி படத்துக்கு...படித்து முடித்து வீடு திரும்பும் 22 வயது  வெள்ளைப்  பெண்ணான   யுஜீனியாஎப்படியும் வீட்டு வேலை  செய்யும்  கறுப்பு இன பெண்களின் அவலக்கதைகளை வெளிக்கொணர ஏற்கனவே குழந்தையைஇழந்த எபலீன் மற்றும் அவரது நண்பி மின்னியை நெருங்குகிறார்...முதலில் தயங்கி பிறகு   இருவரும் தங்கள்வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகளை யுஜீனியாவிடம் சொல்லத்தொடங்குகின்றனர்...
தை நகர நகர கறுப்பு இனப்பெண்கள் மீது கொடுமைகள் தொடர்கின்றன. அறுபதுகளில்  அவர்கள்  நாய்க்கு  சமமாய் நடத்தப்பட்டதையும் அவர்களின் அவலங்களையும் நாம் நமக்கு நடப்பது போல் உணர வைத்தது இந்த புது இயக்குனரின் வெற்றி.அந்த  மூன்று பெண்களும் நம்மை சிரிக்கவைத்து அழ வைத்து...படம் முடிந்து வெளியே வருகையில் யாருக்காவது எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நம்மை நினைக்க வைப்பது இந்த புது இயக்குனரின்  மற்றொரு  வெற்றி...
டத்தில் வயதான  நடிகைகள் நடிப்பு கோலோச்சுகிறது...  மின்னியின்கொடூர முதலாளியம்மாவாக வரும் ஹில்லி (Bryce Dallas Howard )இந்த வருட ஆஸ்கார் விருதை தன் பாக்கெட்டில் இப்போதைக்கு வைத்திருக்கிறார்.எபலீனாக Viola Davis ...மின்னியாக  Octavia Spencer வந்து யுஜீனியாவிடம் ரகசியமாய்  தங்கள் அனுபவங்கள் பகிர்வது ஒரு மினி த்ரில்லர் பட அனுபவம் கூட...

Emma Stone யுஜீனியாக பலமுறை  விக் மாற்றி கஷ்டப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் ஒரு   கறுப்பினப் பெண்ணைப்போட்டிருந்தால்...இன்னும் நல்லாயிருந்திருக்கும்.அதற்க்கு நாம் The Help புத்தகத்தை மாற்றி எழுத வேண்டியிருக்கும்.






கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.
source:reverienreality.