உலகின் தலை சிறந்த ஹீரோ 2010 வரிசையில் இடம் பிடித்த ஒரே இந்தியன் நாராயணன் கிருஷ்ணன் அந்த மாமேடையில் கௌரவவிக்கப்பட்ட அந்த நிகழ்வை CNN தொலைகாட்சியில் கண்ட போது பெருகிய கண்ணீரை தடுக்க முடியவில்லை. ஒரு தமிழன் அதிலும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் கம்பீரமாக தமிழை உயர்த்திபிடித்து ஏ. ஆர். ரஹ்மான் சொன்ன அதே வரிகளில் மீண்டும் ” எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று அந்த மாமேடையில் தமிழில் சொல்லி தமிழுக்கு பெருமை சேர்த்தார்.
இந்த நிகழ்வில் அதிக வோட்டுக்களை பெற்று champion பட்டத்தை தட்டிசென்றவர் நேபாளத்தை சேர்ந்த அனுராதா கொய்ராலா என்ற தூய்மையான உள்ளம். எங்கள் தமிழனும் உயர்ந்த உள்ளமும், பெரும் கருணையும் கொண்டவன் என்று உலகிற்கு நிரூபித்த அந்த கணம் தமிழர் வாழ்வில் போற்றத்தக்க தருணம்.
இந்த நிகழ்வை பற்றி ஒரு மாதத்திற்கு முன்பு நான் எழுதிய ” 2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்” என்ற பதிவை தமிழ் பதிவுலகம் பல்லாயிரம் பதிவுகளாக உருவெடுத்து கொண்டு சென்றதை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறேன். மணிக்கணக்கில் நடிகர்களை பேட்டி எடுக்கும் தமிழ் தொலைக்காட்சி உலகம் இவரை பற்றி எந்த ஒரு செய்தியையும் வெளியிட்டதாக இதுவரை நான் காணவில்லை. இந்த சூழ்நிலையில் பதிவுலகம் மட்டுமே இவரை கொண்டாடியது என்றால் அது மிகை இல்லை. நான் எழுதிய பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு என்றால் அது தான். அதை பல நண்பர்கள் தாங்கள் எழுதியது போல பதிவிட்டு இருந்தாலும் அதுகுறித்து நான் வருத்தம் அடையவில்லை மாறாக பெருமையே அடைந்தேன். எங்கும் அதை நான் உரிமை கொண்டாட வில்லை. நல்ல விஷயம் விரைவாக நிறையபேரை அடையவேண்டும். அதன் மூலம் என் தமிழன் உலக அரங்கில் பெருமை கொள்ளவேண்டும் என்ற வெறி மட்டுமே என்னுள் இருந்தது. ஆனால் பிரபல பதிவர்கள் யாரும் இதை முன் எடுத்து செல்லவில்லை என்ற வருத்தம் உண்டு. சென்றிருந்தால் இன்னும் நிறைய வாசகர்களை இது அடைந்திருக்கலாம். நிறைய வோட்டுக்கள் விழுந்திருக்கலாம்.
எது எப்படியோ எங்கள் நிஜ ஹீரோ உலக அரங்கில் தமிழன் பெருமையை நிலைநாட்டிவிட்டார். இந்த பெருமையை இப்பொழுதாவது அவரை வாழ்த்தி எழுதி கொண்டாடுவோம். Mail, Forum, Blog, Facebook, Twitter என்று என்னென்ன இணைய வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் நாராயணன் கிருஷ்ணனின் உயர்ந்த உள்ளத்தை எடுத்துசென்ற அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
அவரின் கரங்களை தொடர்ந்து வலுப்படுத்துவோம். நம்மால் இயன்ற பொருளுதவியை செய்வோம். மேல் விவரம் இங்கே